RSS Feed

‘Tamil’ Category

 1. காதலில் சொதப்புவது எப்படி?

  February 23, 2012 by Suraj

  நாளைய இயக்குனர் என்று கலைஞர் தொலைக்காட்சியால் உலகுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் பாலாஜி மோகன். அவர் வெள்ளித்திரையில் இயக்கி வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம் “காதலில் சொதப்புவது எப்படி?”. இதே பெயரில் இவர் எடுத்த குறும்படம் பலத்த வரவேற்பைப் பெற்றதுமல்லாமல் அவருக்கு பெரும் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அந்த வெற்றி உற்சாகத்துடன் அதை அப்படியே முழு நீளத் திரைப்படமாக எடுத்துவிட்டார். இதற்கு முன் குறும்பட இயக்குனர்கள் சிலர் வெள்ளித்திரையில் வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு குறும்படம் திரைப்படமாக மாறியிருப்பது இதுவே முதல் முறை. இந்த புது யுத்தியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.


  (more…)


 2. தோனி: வெற்றி நாயகன்

  February 12, 2012 by Suraj

  தோனி – படத்தின் பெயரை மட்டும் விளையாட்டுத் தனமாக வைத்துவிட்டு படம் முழுக்க நமது கல்வி முறையை கடுமையாகச் சாடியிருக்கிரார்கள். மகேஷ் மன்ஜரேகரின் மராட்டிய படமான ‘சிக்க்ஷநக்ஷய ஆய்ச்சா க்ஹோ’ வின் தழுவலே இப்படம். ஆனால் பிரகாஷ் ராஜ் மற்றும் ஞானவேல் தங்களது திரைக்கதை மூலமாக படத்தை ஓர் உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டனர். இன்று நம் நாட்டில் கல்வி முறையால் பாதிக்கப்பட்டும், கல்வியை காரணமாக காட்டியும் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொள்வதையும் வன்முறை செயல்களில் ஈடுபடுவதையும் தினம் தினம் செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் நம்மில் பலர் இச்செய்திகளை பத்தோடு பதினொன்றாக எடுத்துக் கொண்டு சும்மா இருந்து விடுகிறோம். இவ்வாறு நடைபெறும் ஓவ்வொரு தற்கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களையும் அதனால் எப்படி ஒரு தலைமுறையும் சமூகமும் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதையும் வக்கிரமாக தோலுரித்துக் காட்டுகிறது இத்திரைப்படம்.

  (more…)


 3. மெரினா: காற்று வாங்க மட்டும்

  February 10, 2012 by Suraj

  மெரினா – பொங்கல் சீசன் ஒய்ந்த பின் வெளிவந்திருக்கும் முதல் திரைப்படம். படம் வெளிவரும் முன்னரே ‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை‘ என்ற பாடலை (promo song) வெளியிட்டு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டனர் படக்குழுவினர். தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற பாண்டிராஜின் படம் என்பதாலும் சின்னத்திரை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் திரைப்படம் என்பதாலும் எதிர்பார்ப்பு மேலும் அதிகமாயிற்று. இவ்வனைத்து எதிர்பார்புகளையும் இத்திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


  (more…)


 4. வேட்டை: அரதப்பழசு!

  January 18, 2012 by Suraj

  தம்பி உடையான் படைக்கு அஞ்சான் – இந்த ஒரு பழமொழியை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரத் திரைப்படத்தையே எடுத்துவிட்டார் லிங்குசாமி. இவருடைய முதல் படம் ஆனந்தம் என்று சொன்னால் இன்று பலராலும் நம்பக்கூட முடியாது. அந்த அளவுக்கு மசாலா இயக்குனர் ஆகி விட்டார்.

  Vettai Review

  எட்டு வருடங்களுக்கு பிறகு லிங்குசாமியும் மாதவனும் இணைந்திருக்கிறார்கள். ஆனால் இந்த எட்டு வருடமாக commercial cinema  என்னும் பாதையிலிருந்து சிறிதும் விலகாமல் பயணித்துக்கொண்டிருக்கிறார் லிங்குசாமி. மாதவனோ மெயின் ஹீரோவிலிருந்து செகண்டரி ஹீரோவாகிவிட்டார். (title card இல் ஆர்யா பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள்). படத்தில் கதை என்று பெரிதாக எதுவும் இல்லை. இதுவரை தமிழ் சினிமாவில் காவல் துறையை மையமாக வைத்து வந்திருக்கும் படங்களில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக காட்சிகளையும் கதையமைப்பையும் சுட்டு வேகமான திரைக்கதையுடன் கோர்த்து ஒரு முழு நீள action திரைப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர். படத்தின் இரண்டாவது frameஇல் வரும் காட்சிகளைப் பார்த்தால் எட்டாவது frameஇல் என்ன வரும் என்று யூகித்து விடலாம். இதுவே படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

  (more…)


 5. நண்பன்: Remake ஆக இருந்தாலும் நடிகர்களின் சட்டை நிறத்தையாவது மாற்றியிருக்கலாம் ஷங்கர்

  January 15, 2012 by Suraj

  சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பாக நண்பர்களுடன் திருச்சி காவேரி திரையரங்கில் “3 idiots ” திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். ஓரளவுக்கே ஹிந்தி தெரிந்த என்னிடத்தில் அந்த படம் மொழி என்னும் வரம்பயும் மீறி ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. படத்தை பார்த்த அடுத்த சில நாட்களுக்கு ஒவ்வொரு நொடியும் அந்த படமும் அதில் வரும் கதாபாத்திரங்களும் என் நினைவலைகளில் சுழன்று கொண்டிருந்தன. படம் பார்த்து விட்டு வெளியே வரும்பொழுது நண்பர்கள் உறவினர்கள் என அனைவருக்கும் “Don’t miss 3 idiots. It’s a once in a lifetime movie” என குறுஞ்செய்தி (sms) அனுப்பியது மட்டுமில்லாமல் கண்ணில் படுபவர்களை எல்லாம் அந்த படத்தை சென்று பார்க்குமாறு நச்சரிதுக்கொண்டிருந்தேன். இது போன்று ஒரு படம் தமிழில் வராதா என ஏங்கியும் கூட இருக்கிறேன்.

  Nanban Review

  இன்று எனது ஏக்கம் இயக்குனர் ஷங்கரின் நண்பன் படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஷங்கரை தவிர யாராலும் இந்த படத்தை இவ்வளவு கச்சிதமாக remake செய்திருக்க முடியாது. ஹிந்தி படத்தின் திரைக்கதையை சிறிதும் மாற்றவில்லை. இதுவே படத்தின் மிகப்பெரிய பலம் என்றும் சொல்லலாம். கதை அப்படியே “3 idiots” தான் என்பதாலும் பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும் என்பதாலும் அதை பற்றி பெரிதாக பேச வேண்டியது இல்லை.

  (more…)